இலங்கைபிரபலமானவை
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்!!
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிற்பகல் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளின் 2 பாகங்களும், வாயு துப்பாக்கி ஒன்றும், ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் ஈய குழாயும், 2 கிலோ கிராம் தொகையும், டிரில் இயந்திரம் ஒன்றும் வெவ்வேறு அளவிலான 5 கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. .
கலேலிய பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 62 வயதுடையவா்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (30) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.