கொழும்புபிரபலமானவைமுக்கிய செய்திகள்

தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை

தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளிடமிருந்து இத்தாதிப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.நிகழ் நிலை விண்ணப்பங்களை 2023.09.15 தொடக்கம் 2023.10.18ஆம் திகதி வரை இத்தாதிப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கலாம்.மேலதிக தகவல்களுக்காக 2023.09.15ஆம் திகதி அரசாங்க வர்த்தமான மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இற்குள் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: