முக்கிய செய்திகள்
தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் – அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா

தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.
இலங்கை தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் எதிர்காலத்தில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பாண்டு நிர்வாக குழு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
