இலங்கைமுக்கிய செய்திகள்

தமக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தி மகிந்த சிறிவர்தன மனு தாக்கல்!!

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தி, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன தனது சட்டத்தரணி ஊடாக ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஆட்சேபித்தே இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்ளூராட்சி அமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தவறியதற்காக திறைசேரியின் செயலாளருக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உத்தரவின்றி நிதியை விடுவிக்க அதிகாரம் இல்லை
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அமைய, நிதி அமைச்சரின் உத்தரவின்றி அரசியலமைப்பின் கீழ், நிதியை விடுவிக்க, திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்று அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் சரத்துகளின் கீழ், அமைச்சர் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியை விடுவிக்க உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் செலவினங்களை அத்தியாவசிய செலவுகளாக சுட்டிக்காட்டாமல் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எனவே, இப்போது அரசியலமைப்பின் கீழ், அத்தகைய நிதியை விடுவிக்க திறைசேரியின் செயலாளருக்கு அதிகாரம் இல்லையென சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: