தொழில்நுட்பம்

ட்விட்டரில் கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் திட்டம்: குறிப்பிட்ட திகதிக்குள் பழைய ப்ளு டிக்குகளை நீக்க முடிவு

ட்விட்டர் நிறுவனம் இதுவரை செயல்பாட்டில் வைத்திருந்த பழைய டிக்குகளை நீக்கி சந்தா முறையில் புளூ டிக் பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

சந்தா செலுத்தும் முறை
ட்விட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் கணக்குகளை வெரிஃபைடு செய்து புளூ டிக் (blue tick) பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 1, 2023 முதல் ட்விட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது.

சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட ட்விட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது.

புதிய அப்டேட்டின் மூலம் ட்விட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க்(verified check mark) நீக்கப்படுகிறது.

புதிய திட்டங்கள்
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் படி ட்விட்டர் புளூ சந்தா(twitter blue) பயனர்களுக்கு ஏராளமான அம்சங்களை பிரத்தியேகமாக வழங்குகிறது.

இதில், வெரிஃபைடு செக்மார்க், ட்விட் உரையாடல்களுக்கு முன்னுரிமை, குறைந்த விளம்பரங்கள், புக்மார்க் ஃபோல்டர்கள், நேவிகேஷனை கஸ்டமைஸ் செய்யும் வசதி, ட்விட்களை எடிட் மற்றும் அண்டு செய்யும் வசதி இடம் பெற்று இருக்கிறது.

உலகளவில் ட்விட்டர் புளூ வெளியாகி இருப்பதை அடுத்து ட்விட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது.

பழைய வழக்கப்படி ட்விட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் வெரிஃபைடு வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: