
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, ரோஹன பண்டார, மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் (14) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப் பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்காகப் பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார்.
