ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை

ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருப்பவர்களின் நிலையை அறிந்துகொள்ள ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிணைக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை சென்று பார்வையிட வலியுறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், உலக சுகாதார அமைப்பு, பிணைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனும் கலந்து கொண்டிருந்தார்.
கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எலி கோஹன் ஐ.நா பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஹமாஸ் அமைப்பினர் கொடூரமானவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் அவர்களிடமிருந்து காசாவை விடுவிக்க வேண்டும் என சுதந்திர நாடுகள் கூறுகின்ற போதிலும் இவர் அமைதி காக்கிறார் என அவர் தெரிவித்தார்.
இவர் தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாமல் இருப்பது தவறு எனவும் அவர் சாடினார்.
