ஜவான் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு, சரசரவென விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்

நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் முன்பதிவு சூடுபிடித்துள்ள நிலையில் ப்ரீ புக்கில் பல கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.