
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார்
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர அவர்கள் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், “JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து ட்ரங்கல் – அஸ்ஸார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளனர்.
