உலகம்ஐரோப்பா

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் (28) செவ்வாய்க்கிழமை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஆமோரி மாகாணத்தில் ஹொக்கைடோ என்ற இடத்தில் 6.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 20 கீ.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: