இலங்கைமுக்கிய செய்திகள்வட மாகாணம்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ் மக்கள்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2910 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக சங்காணை பிரதேச செயலாளர் பிரிவில் 279 குடும்பங்களை சேர்ந்த 950 நபர்களும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 234 குடும்பங்களை சேர்ந்த 766 நபர்களும், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 180 குடும்பங்களை சேர்ந்த 630 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 204 நபர்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 191 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தில் 20 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: