முக்கிய செய்திகள்
சவாலாக அமையும் பாதீட்டு இலக்குகள்

சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்துக்கான பாதீட்டு இலக்குகள் பொருளாதார மீட்சிக்கு சவாலாக அமையும் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், குறித்த இலக்குகள் 2025 ஆம் ஆண்டிலும் தொடரக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், அடுத்த வருடத்திற்காக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள 7.1 சதவீதம் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
