
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுல் இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நெரான் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
