இலங்கைவட மாகாணம்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சித்தங்கேணி, கலைவாணி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் நேற்று (19) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இச்சந்தேக நபர் விளக்கமறியலில் இருக்கும் போது கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று (20) நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே இச் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
