இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் – அருட்தந்தை ஜெகதாஸ்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி நடாத்தப்படுகின்றது.
மிகவும் கோரமாக வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வேண்டும். இலங்கை நீதி விசாரணையில் நம்பிக்கையில்லை. எனவே சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என சமூகசெயற்பாட்டாளரான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்று சனிக்கிழமை (9) ஈகைசுடர் ஏற்றி எழுச்சி பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1990 ம் ஆண்டு சத்துருக்கொண்டான் பனிச்சையடி ,கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவம் சுற்றிவளைத்து அங்கு வீடுகளில் இருந்த பெண்கள் ஆண்கள் உட்பட 186 பேரை கூட்டத்துக்கு என அழைத்துச் சென்று அவர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் 33 ஆவது நினைவஞ்சலி பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சத்துருக்கொண்டான் சந்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறுவினர்கள் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நினைவு தூபியில் விளக்கேற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: