முக்கிய செய்திகள்

கோப்பாய் பஸ் விபத்தினால் பதற்றம்.

பருத்தித் துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இரவு 9 மணி அளவில் கோப்பாய் இராசபாதையில் நடந்துள்ளது. விபத்தையடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கோப்பாயை சேர்ந்த எமில் ரவி என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அதிசொகுசு பஸ் இவரை  மோதியுள்ளது.

விபத்தையடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு பஸ்ஸை தாக்கி தீயிட முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பஸ்சிற்குள் பயணிகள் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு கோப்பாய் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஒன்று  திரண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அங்கு திரண்டிருந்தவர்களும் போலீசார் மீதும் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

கடும் பிரேதனத்தின் பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்தில் தொடர்புடைய பஸ் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிலிருந்து பயணிகள் வேறொரு பஸ் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: