முக்கிய செய்திகள்
கொழும்பு மருதானை பகுதியில் நீர்த்தாரைப் பிரயோகம்

கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு பேராசிரியர் பிரிவொன்றை நியமிக்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி விஹாரமஹாதேவி பூங்கா பகுதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டததன் காரணமாக கொழும்பு – 10, டீன்ஸ் வீதி மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மருதானை பகுதியில் வைத்து அவர்களை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
