
கொழும்பு கிராண்ட்பாஸில் இன்று (17) மாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் உள்ள நான்கு மாடி அச்சகத்தில் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்தோர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
