இலங்கைகிழக்கு மாகாணம்பிரபலமானவை
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் தம் கடமைகளை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் , இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி இராமேஸ்வரன், கபில நுவன் அத்துகோரல,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் , அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

