இலங்கைகிழக்கு மாகாணம்

கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா – 2023 போட்டிகளில் சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவில் முதலிடம் இரண்டாமிடம் பெற்ற சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (20) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம்.தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸ்வரன் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

பிரதீபா போட்டியில் வெற்றி பெற்ற இச்சாதனையானது சாய்ந்தமருது வரலாற்றில் பாரியதொரு வெற்றியாகும். ஏனெனில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து எட்டு மாத காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த மத்திய நிலையங்களை வீழ்த்தி இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.

கலைஇ கலாசார போட்டியான கோலாட்டம் சிரேஷ்ட பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவர்களான எம்.எப்.எம். றிஹ்பத், ஏ.ஜீ.எம்.ஆஸிப், என்.ஹம்தி, என்.எம்.இஷாம், ஜே.எம்.றிப்காஸ், என்.நப்ரின், ஜே.எம்.ஷாபீத், என்.எம்.அல்தாப், ஏ.எம்.எம்.நுஸ்கி, என்.எம்.எம். றுக்ஸான், ஏ.எம்.அஸ்ரி, ஏ.எம்.ஹபீஸ், ஜே.எம்.ஜகி, ஏ.எம்.எம். அர்ஷிக், எப்.எம்.ஹசீன் மற்றும் ரபான், கோலாட்டம் போட்டியான கனிஷ்ட பிரிவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்களான ஜே.எம்.ஜரிஹ், எம்.எப்.எம். அஸ்பல், எம்.எப்.எம்.பஹட் , ஏ.ஆர்.எம்.சப்கி, என்.அமைத் அஹமட், எஸ்.எம்.ஏ.மஹ்தி, எம்.ஆர். இஸ்ஸத், எம்.ஐ.எம். அபான், எஸ்.எம். ஆதிப், எம். பிஸ்மில்லாஹ், எம்.ஏ.எம்.அப்துல் ஹாதி, எப்.எம்.பர்ஹான், ஆர்.ஏ.எம். அஹ்னாப், மற்றும் சித்திரப் போட்டியில் எம். எல். பாத்திமா ஜியா முதலாம் இடத்தையும் ஜே. றின்சான் இரண்டாம் இடத்தையும் பெற்ற மாணவர்கள் உட்பட கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளர்களான : எம்.ஐ.எம். அமீர் (ஆசிரியர்)
எம்.ஐ. அலாவுதீன் (அண்ணாவி)
எம்.எச். பைசர் (அண்ணாவி), ஏ. இஸ்ஸதீன் (அண்ணாவி)
ஏ.எல்.எம். சாஜி (ஆசிரியர்), ஐ.எம். சியாம் (ஆசிரியர்) மற்றும் எஸ்.எச்.ஏ. கபூர் (வாத்தியம்) ஆகியோர் நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருதின் பிரதேச செயலாக கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீக்கா, பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சுரேஷ்குமார், கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏ.பி. நௌசாத், நிந்தவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப், மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழு செயலாளர் கலைஞர் அஸ்வான் மௌலானா, பாடகர் எம்.சீ.ஏ.மாஹிர் உட்பட கலாசார மத்திய நிலையத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதில் நீண்ட காலமாக கலாசார நிகழ்வுகள் தொடராக நடந்து வருகிறது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை வைபவ ரீதியாக இன்னும் திறக்கப்படாத நிலையிலும் இவ்வெற்றி கிடைத்தமை சவாலானதொரு விடயம்.

இவ்வெற்றிக்காகப்பங்கு பற்றி பாடுபட்ட அனைவருக்கும் கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் இதன் போது வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதன்போது கலைஞர் அஸ்வான் மௌலானா மற்றும் பாடகர் எம்.ஏ.சீ.மாஹிர் ஆகியோர் பாடல்களைப் பாடி சபையோரை மகிழ்வித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: