இந்தியச்செய்திகள்சினிமா

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த த்ரிஷா

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிரபாஸின் கல்கி 2829 ஏ.டி. ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசன் – மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகின்றனர்.

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: