உலகம்கனடாமுக்கிய செய்திகள்

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தவர்கள்

பொருளாதார நிலை, இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை, வேறு நாடுகளில் கிடைக்கப்பெறும் பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் கனடாவில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள் வேறும் நாடுகளுக்கு பெருமளவில் செல்லத் தொடங்கியுள்ளனர்.

கனடிய குடியுரிமை நிறுவகம் மற்றும் கனடிய பேரவை என்பன இது தொடர்பிலான ஆய்வு ஒன்றை நடத்திய நிலையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கனடாவை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்த குடியேறிகளின் எண்ணிக்கை 31 வீதம் எனவும் இது தேசிய சராசரி எண்ணிக்கையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாட்டவர்கள் வேறு நாடுகளை நோக்கி குடிப்பெயரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: