கொழும்புமுக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று (21.05.2023) விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின் உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை
கம்போடியா பயணத்தின் போது இந்த வெற்று தோட்டா உறையை எடுத்து வைத்துக் கொண்டதாக இந்த கனேடிய தம்பதி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவிற்கு வரும் எவரும் இவ்வாறானவற்றை எடுக்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: