கொழும்புமுக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் நடமாட்டம் திடீரென அதிகரிப்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பயணிகள் நடமாட்டம் சுமார் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்து 7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துக்கள்
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியை விடவும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாளாந்தம் 18,000 பயணிகள், பயணங்களை மேற்கொள்வதாகவும் 120 விமானங்கள் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: