ஏறாவூர் பற்று பிரதேச சபையில் நடைபெற்ற கலந்துரையாடல்

CHRYSALIS நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச சபையில் நடைபெற்ற கலந்துரையாடல்
இந் நிகழ்வானது இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது CHRYSALIS நிறுவனத்தின் முகாமையாளர், திட்ட இணைப்பாளர் மிதுனன், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர், சன சமூக நிலைய உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏறாவூர் பற்று தேச செயலக பிரிவுக்கு உட்பட்ட எட்டு சனசமூக நிலையங்களைச் சேர்ந்த தலைவர் மற்றும் செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் நோக்கமானது கிராம மட்டங்களில் உள்ள சன சமூக நிலையங்களை பலப்படுத்தல் மற்றும் மாவட்ட மட்டத்தில் சனசமூக நிலைய வலையமைப்பு ஒன்றை உருவாக்குதல் ஆகும்.
இந்த வலையமைப்பின் ஊடாக கிராமங்கள், மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு தெரியப்படுத்தி தீர்வு காண்பதற்காக பிரதேச சபையுடன் இணைந்து செயல்படுதல் ஆகும் என CHRYSALIS நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
CHRYSALIS நிறுவனத்தினுடைய கடந்த காலத்தில் செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், பிரதேச சபையினால் செயற்படுத்த படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் பிரதேச சபை செயலாளர் முன்வைத்தமையும் குறிப்பிட தக்கது.



