இந்தியச்செய்திகள்
எந்த திட்டத்தின் கீழும் ”ஜல்லிக்கட்டு” இல்லை – அதை அங்கீகரிக்கவும் இல்லை – மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் போன்ற விளையாட்டை அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள், பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றும் விளங்குகிறது. இந்நிலையில், கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதுபோன்ற விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.