முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும், விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: