
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்தபோது உச்ச நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
