ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள குழு ஒன்றை நியமிக்க தீர்மானம்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதி அரசர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற தேர்வு குழு ஒன்றின் ஊடாக ஆராய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 21 தாக்குதல்களின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இறுதி தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னதாக குறித்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவிக் குழுவின் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்