இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

ஈழத்து திருச்செந்தூர் ஆலய தேர்த்திருவிழா நிறைவு.

சுவாமி ஓங்காரநந்தா சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத் திருவிழா 04.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவானது சமுத்திர தீர்த்தோர்ச்சவத்துடன் முடிவடையும். அந்த வகையில் இன்றயதினம் கல்லடி முகத்துவாரம், திருச்செந்தூர், டச்பார் நாவலடி பொது மக்களின் தேர்வலமானது 4.30 மணியளவில் ஆரம்பமாகி சுவாமி சித்திரத்தேரில் வெளி வீதி வலம் வந்து 7.00 மணியளவில் முடிவுற்றது.

அத்தோடு தேர்வலத்தின் போது நாட்டிய கலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு அவ் மாணவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: