உலகம்முக்கிய செய்திகள்
இஸ்ரேல் காசாவில் உள்ள ஹமாஸின் முகாமை கைப்பற்றியது

பத்து மணிநேரப் போருக்குப் பின்னர் வடக்கு காசாவில் உள்ள ஹமாஸின் முகாமை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
நேற்றிரவு முழுவதும் அங்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு காசாவில் இருந்து தெற்கு நோக்கி மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும் பாதை ஒன்று ஐந்தாவது நாளாகவும் திறக்கப்பட்டுள்ளது.
காசா நகரப் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சுமார் 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எனினும், காயமடைந்த பாலஸ்தீனியர்களை வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுடன் வெளியேற்றுவதற்கு ஹமாஸ் தரப்பினர் விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக எகிப்திற்குள் நுழையும் ரஃபா எல்லை மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
