இளைஞர்களின் ஏற்பாட்டில் சவுக்கடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி

இளைஞர்களின் ஏற்பாட்டில் சவுக்கடி கடற்கரையில் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது.
இளைஞர்களின் ஏற்பாட்டில் சவுக்கடி கடற்கரையில் சிரமதான பணி
மேற்கொள்ளப்பட்டது
இந் நிகழ்வானது இன்று செவ்வாய்க்கிழமை ( 14 ) காலை 9. 30 மணிக்கு சவுக்கடி கடற்கரையில் இடம் பெற்றது.
இதன் போது குடியிருப்பு, தன்னாமுனை, ஏறாவூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்தச் செயற்பாட்டினுடைய நோக்கமானது குறித்த பிரதேசத்தில் உள்ள கடற்கரையானது கடற் தொழிலாளர்கள் மற்றும் பொழுதுபோக்கினை கழிப்பதற்காக வருகின்ற பொதுமக்கள் பயன்படுத்துகின்ற ஒரு பொதுவான இடமாகும்.
இருந்தும் இங்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் காணப்படுவதனால் இதனை அகற்றி தூய்மையான இடமாக மாற்றுவதாகும் என ஏற்பாட்டு குழுவினராகிய இளைஞர்கள் தெரிவித்தனர்.
இந்த செயற்பாட்டுக்கான நிதி பங்களிப்பினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் எனப்படுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியதோடு கழிவு அகற்றும் பணியினை ஏறாவூர் பற்று பிரதேச சபையினர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.





