
இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து தென் கிழக்கு திசையில் 800 கிலோமீற்றருக்கு அப்பாலான கடற்பகுதியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று மதியம் 12.30 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
