இந்திய உள்துறை அமைச்சர் தலைமையில் புதுடில்லியில் உறுப்பு நாடுகளின் துறைத் தலைவர்களின் கூட்டம்!!

புதுடில்லியில் நடைபெறும் எஸ்.சி.ஓ என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் துறைத் தலைவர்களின் கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கியுள்ளார்.
அவசரகாலச் சூழ்நிலைகளைத் தடுப்பது மற்றும் நீக்குவது குறித்து நேற்று (21.04.2023) இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகள் அங்கம் பெற்றுள்ளன.
அவசரகால சூழ்நிலைகள்
ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகியன கண்காணிப்பு நாடுகளாக செயற்படுகின்றன.
ஆறு உரையாடல் பங்காளி நாடுகளாக ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி என்பன செயற்படுகின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு முழு அளவிலான உறுப்பு நாடாக இந்தியா இணைந்ததில் இருந்து, இந்தியா அமைப்புடன் தீவிர ஈடுபாட்டைப் பேணி வருகிறது.
இந்தியாவின் ஆதரவு
இந்த நிலையில் நேற்றய கூட்டத்தின்போது, எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் பிராந்தியங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான அவசரகால சூழ்நிலைகள் மற்றும் அவற்றைக் கையாள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பல்வேறு வழிமுறைகளுக்கு கணிசமான ஆதரவை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.