இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!!

வறுமை, பசி, சமத்துவமின்மை மற்றும் நோய்களைக் குறைப்பதற்கான 17 ஐக்கிய நாடுகளின் நோக்கங்களின் பட்டியலான ‘சமூக வளர்ச்சி இலக்குகளை’ எட்டுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை தற்போது வீசிவரும் சூரிய வெப்ப அலைகள் பலவீனப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் விவசாயம், பொருளாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தின் மீது கொலையாளி வெப்ப அலைகள் ‘முன்னோடியில்லாத சுமைகளை’ ஏற்படுத்துகின்றதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றமானது, வறுமை, சமத்துவமின்மை மற்றும் நோயைக் குறைப்பதற்கான நாட்டின் நீண்டகால முயற்சிகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.
காலநிலை அபாயங்கள்
இந்தியாவில் கடுமையான வெப்பம் 1992 முதல் 24,000க்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், வட இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் துரிதமான பனிப்பாறை உருகலைத் தூண்டியுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரமித் தேப்நாத் தலைமையிலான அறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
எனவே, இந்தியா இப்போது பல, ஒட்டுமொத்த காலநிலை அபாயங்களின் மோதலை எதிர்கொள்கிறது. தீவிர வானிலை கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மொத்த பரப்பளவில் 90 சதவிகிதம் இப்போது தீவிர வெப்ப ஆபத்து மண்டலங்களில் உள்ளது என்றும் ரமித் தேப்நாத் தலைமையிலான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
வெப்பத்தைத் தணிக்கும் விடயத்தில் இந்தியா ஏற்கனவே சில பணிகளைச் செய்திருக்கிறது.
அவர்கள் உண்மையில் இப்போது வெப்ப அலைகளை அவர்களின் பேரிடர் நிவாரணப் பொதியின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கிறார்கள்.
மக்களின் வாழ்க்கைத் தரம்
ஆனால், இந்த திட்டங்களின் வேகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், அதிக வெப்பம் இறுதியில் ‘வெளிப்புற வேலைத் திறன்’ 15 சதவிகிதம் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் 480 மில்லியன் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவடையலாம்.
அத்துடன், 2050க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதம் இதற்குச் செலவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.