இலங்கைகிழக்கு மாகாணம்

ஆசிரியர்களுக்கான செயலமர்வு

சமூகத்தில் நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்ல விழுமியங்கள் கொண்ட குழந்தைகளை சமுதாயத்திற்கு உருவாக்குமா பணி ஆசிரியர் பணியாகும். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டம் மற்றும் உலக வங்கியின் உடைய அனுசரணையோடு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம தலைமையில் மாவட்ட  முன் பிள்ளை பருவ  தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான ஏழு நாட்கள் கொண்ட பயிற்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் தங்கள் பணியை கடின உழைப்பின் மூலம் நல்லொழுக்கம் நல்நடத்தை  கொண்ட நல்ல குழந்தைகளை சமுதாயத்திற்கு உருவாக்க வேண்டும். அவர்கள் தங்கள் குழந்தை பருவத்திலேயே அதே உத்வேகத்தைப் பெற வேண்டும் என்று  அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம கூறினார்.

குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமான பணியாகும், அதற்கு அந்த இடங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பெரும் பொறுப்பும் உள்ளது. மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான அறிவு, அணுகுமுறை மற்றும் திறன்களை மேம்படுத்த வழிகாட்ட முடியும்.  அதற்கு இப்பயிற்சி பயனுள்ளதாக அமையும் என கூறப்பட்டது.

உலக வங்கியின் அனுசரணையில் 2015 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி தொடர்பான திட்டங்களில் ஒன்றாக ஆரம்பக் குழந்தைப் பருவ நிலைய ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  சம்பந்தப்பட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஆசிரியர்களுக்கு மதிப்புமிக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய, உதவி திட்டமிட பணிப்பாளர் ரோஹன் பிரசாந்த்,  மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.ல.ரபீஸ், 

மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு. சம்சுல், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தீபானி அபேசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: