இலங்கைவட மாகாணம்

அறிக்கையை மீளப்பெறுவதாக தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில்
இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம் என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாகஅறிவித்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: