முக்கிய செய்திகள்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டுப் பணி பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை  பிரதேச செயலகத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, இலங்கையின் 15 வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டை முன்னிட்டு கட்டிடங்களை நிரற் படுத்தும் கட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  வாழைச்சேனை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இப்பயிற்சி நிகழ்வில் பிரதித்தொகை மதிப்பு ஆணையாளரும் வாழைச்சேனை பிரதேச செயலாளருமான  எஸ். எம். முஸம்மில்  மற்றும் உதவித்தொகை மதிப்பு ஆணையாளரும் உதவி பிரதேச செயலாளருமான  எம். ஏ. சி. றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். எம். ருவைத் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.  

இப்பயிற்சிகள்  பிரதேச செயலகங்களின்  தொகை மதிப்பு உத்தியோகத்தர்களான கோறளைப்பற்று வாழைச்சேனையின்  ச.யோகராசா மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி சார்பாக  எம்.எஸ் எம்.றூமி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியின்  எம்.ஐ.எம் அப்துல் அஸீஸ் ஆகியோரால் நடாத்தப்பட்டன .

 இதில் கிராம சேவை, அபிவிருத்தி மற்றும்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  போன்றோர் களப்பணிக்கான பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.

இம்மதிப்பீட்டுப் பணிக்கான  “கணினி உதவியுடன் தனிப்பட்ட நேர்காணல் (CAPI)” என்ற செயலியைப் பயன்படுத்தும் முறை, அதற்கான செயன்முறை வழிகாட்டல்கள் என்பன குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

இப் பயிற்சிப்  பட்டறை 04 முதல் 06 ஆம் திகதி  வரை கடந்த 3 நாட்களாக  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: