விபத்தில் பெண் ஒருவர் பலி

0 606

புத்தளம், குருநாகல் வீதியின் 3ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம், வில்லுவ வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சனி அபேசேகர (வயது 67) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை மாலை குருநாகல் பகுதியை நோக்பிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணும், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற நபரும் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வீதியில் நடந்து சென்ற பெண் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற நபர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!