லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்திடம் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம்.!!
லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்திடம் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்முதல் ஆகியவற்றில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்த கருத்தால் வெளியான செய்திக்கு நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
லிட்ரோ காஸ் லங்கா கம்பனியின் சர்வதேச விநியோகஸ்தர் தெரிவு முழு வெளிப்படைத்தன்மை மற்றும் இருதரப்பு சட்ட உடன்படிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டது எனவும், உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்படவில்லை அவர்கள் தெரிவித்துள்ளனர்.