பொலிஸ் என்பது பொதுமக்கள், பொது மக்கள் என்பது பொலிசாகும் –
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமார.!!

0 157

பொலிஸ் என்பது பொதுமக்கள், பொது மக்கள் என்பது பொலிசாகும்.
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அன்றிலிருந்து, இன்றுவரையில் இலங்கையில் மனிதர்களின் பிறப்புத் தொடக்கம் இறப்பு வரைக்கும் சேவை செய்யக்கூடிய ஒரு திணைக்களமாகக் காணப்பட்டு வருகின்றது. கொரோனா பீடித்திருந்த வேளையில் பொலிசார் பொதுமக்களுடன் இணைந்தும், பொதுமக்கள் பொலிசாருடன் இணைந்தும் சேவைகள் இடம்பெற்றன. எனவே பொலிஸ் என்பது பொதுமக்கள், பொது மக்கள் என்பது பொலிசாகும் என மட்டக்களப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமார தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் அமைந்தள்ள சக்தி இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (08) திகதி களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நிதிமன்ற நீதிபதி ஜே.வி.ஏ.ரஞ்ஜித்குமர், மட்டக்களப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்குமார, மட்டக்களப்புக்குப் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி எல்.ஆர்.குமாரசிறி, களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயரெத்ன, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபயவிக்கிரம, களுவாஞ்சிகுடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.த.சத்தியகௌரி, பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் யூலி, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

156 வது பொலிஸ் தின நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி தலைமையில் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமை அலுவவகத்தில் நடைபெற்றது. அந்த வகையில் 3ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதி வரையிலும் தேசிய பொலிஸ் தின வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. இவைகளை நாம் மேற்கொள்வது இலங்கைப் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நெருங்கிய உறவைப் பேணுவதற்காகத்தான். எனவே எமது பொலிஸ் திணைக்களம் மக்களுக்கு எதுவித அச்சமுமின்றி வாழ்வதற்குரிய சிறந்த சூழலை உருவாக்குகின்றது. பொலிஸ் திணைக்களம் மிகவும் நட்பு ரீதியான கௌவரமாகச் செயற்படுகின்றது. என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!