திருகோணமலை மூதூர் பிறதேசத்தில் 100 நாட்கள் செயல்முனைவின் 43ம் நாள் நிகழ்வு.!!
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று (12.09.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 43ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மல்லிகைதீவு பிரதேசத்தில் இன்று(12)இடம்பெற்றது. இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகைதந்ததுடன் தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன்வைத்தனர்.









