ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஸ் ஆகியது இலங்கை.!!
2022 ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர்.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிங்கப்பூரை தோற்கடித்து ஆசிய வலைப்பந்து சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்