சிவநேசதுரை சந்திரகாந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு திடீர் விஜயம்!!

0 127

சிவநேசதுரை சந்திரகாந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு நேற்று (02) திகதி திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு பேருந்து சாலைகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக விவசாயிகளுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதன்போது மட்டக்களப்பு பேருந்து சாலைகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளதன் காரணமாக பத்து லட்சம் லீட்டர் டீசலை இரு வாரங்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டியுள்ளதனால் பேருந்து சாலைகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக விவசாயிகளுக்கு தடையின்றி டீசலை வழங்குவது தொடர்பாக விரிவாக ஆரயப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தினையும் நெரிசல்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்குமுகமாக குறித்தசாலைகளில் பாவிக்கப்படாமலுள்ள எரிபொருள் களஞ்சியங்களினூடாக அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருளினை வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!