வேன் மீது லொறி மோதி கோர விபத்து

0 66

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.நிசார் (40) வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹதரஸ்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கொழும்பிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற வேனும், திருகோணமலை பிரதேசத்திலிருந்து குருணாகலைக்கு உமி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!