மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் – பல நிகழ்வுகளில் பங்கேற்றார்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங்(Qi zhenhong) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (26) திகதி இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் இதன்போது சீனத் தூதுர் அறிந்துகொள்ளும் வண்ணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களினால் அளிக்கை செய்யப்பட்டது.
இதன்போது சீன தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நினைவுச் பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டவிள்யு.கே.சில்வா, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மேகன், மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உள்ளிட்ட மேலும் பல மாவட்ட செயலக உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.