சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் கைது!

0 40

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்ட 21 பேர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு, தர்மபுரம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதியில் கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பில், அவர்கள் இவ்வாறு இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 4 பெண்களும், 17 ஆண்களும் அடங்குகின்றனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!