இன்று முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்!

0 33

இன்று முதல் நாளாந்தம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அதேநேரம், 3, 800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் 2, 800 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, அதிலிருந்து சமையல் எரிவாயு தரையிறக்கப்பட்டதுடன், தாங்கி ஊர்திகள் ஊடாக கெரவலப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் திட்டமிட்டப்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த எரிவாயு விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய தினம் 8, 000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!