களுவாஞ்சிக்குடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(14) களுவாஞ்சிக்குடி பிரதான சந்தைக்கு முன்பாக
நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளினை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியினை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பெரும் ஆவலுடன் மக்கள் உணர்வு பூர்மாக பருகியமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.