இன்று 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்வு

0 155

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்களை பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 076 739 39 77 அல்லது 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!